செங்குன்றம் செய்தியாளர்
புழல் அடுத்த கதிர்வேடு மஸ்ஜித் பள்ளியில் நோன்பு திறக்கும் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்டார்.
நேற்று மாலை கதிர்வேடு மஸ்ஜித் பள்ளியில் சிறப்பு அழைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் சசிகால் செந்தில் கலந்துகொண்டு இஸ்லாமியர்களுடன் நோன்பு கஞ்சி அருந்தினார். அவருடன் மாமன்ற உறுப்பினர் சங்கீதா பாபு மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கதிர்வேடு பாபு உட்பட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்
முன்னதாக மாதவரம் மண்டலம் 31 வது வார்டுக்குட்பட்ட புழல் அடுத்த கதிர்வேடு பாலாஜி நகர், பகுதியில் மாமன்ற உறுப்பினர் சங்கீதா பாபு வார்டு மேம்பாட்டு நிதியிலிருந்து 18 லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட புதிய பேருந்து நிழற்குடையை எம் பி . சசிகாந்த் செந்தில் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் சங்கீதா பாபு திருவள்ளூர் நாடாளுமன்ற காங்கிரஸ் பொறுப்பாளர் ஏ ,ஜி ,சிதம்பரம் திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் கதிர்வேடு பாபு காங்கிரஸ் நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் புழல் சர்க்கிள் தலைவர் சந்திரசேகர் 31 வது வார்டு திமுக நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் ,திமுக நிர்வாகிகள் பல்வேறு நகர் பகுதி சேர்ந்த குடியிருப்பு சங்க நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .