தமிழக அரசு எல்லோருக்கும் எல்லாம் என்ற உயரிய நோக்குடன் 14/3/2025 அன்று 2025-2026 ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இந்த நிதி நிலை அறிக்கையில் பள்ளி கல்வி துறைக்கு ரூ.46,767 கோடியும்,உயர் கல்வி துறைக்கு ரூ.8494 கோடியும் ஒதுக்கீடு செய்துள்ளது.

இதை ஆயக்குடி மரத்தடி மையம் வரவேற்கிறது.இதில் காலை உணவு திட்டம்,உயர் கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு கல்விக்கடன்,புதுமை பெண் திட்டம், பெண்கள் சொத்து வாங்கினால்1% பதிவு கட்டணம் குறைப்பு, திருக்குறளை 45 மொழிகளில் மொழி பெயர்க்கும் திட்டம் பள்ளி உடற்கல்வி பாடத்திட்டத்தில் சதுரங்க விளையாட்டு, ,முதுகலை, பட்டதாரி ஆசிரியர்கள் 2562 இடங்களை இந்த ஆண்டில் நிரப்பபடும் என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.அரசு துறையில் காலியாக உள்ள 40000 இடங்களும் இந்த ஆண்டே நிரப்ப படும் எனவும் அறிவித்துள்ளார்.

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை அரசு பணிக்கு தயாராகும் தேர்வர்களின் உணர்வுகளை அப்படியே பிரதி பலித்துள்ளது. மாணவர்கள் நலனில் மிகுந்த முனைப்புடன் செயல்படும் தமிழக முதல்வர்,தமிழக நிதியமைச்சர்,தமிழக அரசுக்கு ஆயக்குடி மரத்தடி மையம் சார்பில் நன்றியினை உரித்தாக்குகிறோம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *