திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் கும்பகோணம்- மன்னார்குடி சாலை மார்க்கத்தில் உள்ள, வலங்கைமான் முகைதீன் பெரிய பள்ளிவாசலில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

வலங்கைமான் வர்த்தக சங்கத் தலைவர் கே. குணசேகரன் தலைமை வகித்தார். முகைதீன் பெரிய பள்ளிவாசல் ஜமாத் தலைவர் காதர் உசேன் அனைவரையும் வரவேற்றார், ஜமாத் செயலாளர் யாகூப் சலீம், பொருளாளர் ஜாகிர் உசேன், இஸ்லாமிய இளைஞர் பேரவை தலைவர் கோல்டன் முகமது ஷெரிப், ஹஜரத் நாகூர் கனி ஹைரி, பள்ளிவாசல் ஜமாத் கமிட்டினர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தார்கள்.
நிகழ்ச்சியில் வர்த்தகர் சங்க செயலாளர் ராயல் கோ. திருநாவுக்கரசு, பொருளாளர் எஸ். புகழேந்தி, துணைத் தலைவர் என்.மாரிமுத்து, இணைச்செயலாளர்கள் எஸ். சிவசங்கரன், ஒய். யாகூப் சலீம், நிர்வாக குழு உறுப்பினர்கள் பா. சிவனேசன் உள்ளிட்ட வர்த்தக சங்கத்தினர் மற்றும் இஸ்லாமிய நண்பர்கள், இஸ்லாமிய இளைஞர் பேரவையினர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.