அலங்காநல்லூர்,
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே தேவசேரி பிரிவு, ஆத்தூர் கிராமத்தில் பி.ஆர்.பிளாஸ்டிக் தொழிற்சாலை நிறுவனம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். கவுண்டர் மகாஜன சங்க தலைவர் விஜயன், திமுக ஒன்றிய செயலாளர்கள், தன்ராஜ், பரந்தாமன், துணைச் செயலாளர் அருண் விஜயன், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக கிளைச் செயலாளர் அறிவு, பி.ஆர்.பிளாஸ்டிக் நிறுவனர் ஸ்வேதா, ராம்குமார், தனசேகர் ஆகியோர் வரவேற்றனர். இந்த தொழில் நிறுவனத்தில் உணவுப்பொருட்கள் பார்சல் செய்வதற்கான பிளாஸ்டிக் பாக்ஸ், மூடிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வாடிக்கையாளர்கள் கேட்கும் அளவில் தயார் செய்யப்படுகிறது.