திருவாரூரில் நடைபெறும் உலகப்புகழ்பெற்ற ஆழித்தேரோட்டத்தினை முன்னிட்டு தியாகராஜ சுவாமி திருக்கோவிலில் இன்று கொடியேற்றும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.. ..

திருவாரூரில் நடைபெறும் உலகப்புகழ்பெற்ற ஆழித்தேரோட்டத்தினை முன்னிட்டு தியாகராஜசுவாமி திருக்கோவிலில் இன்று கொடியேற்றும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.

நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருவாரூரில் உலகப்புகழ்பெற்ற தியாகராஜசுவாமி திருக்கோவிலின் ஆழிதேரோட்டம் அடுத்த மாதம் ஏழாம்தேதி ஆயில்ய நட்சத்திரத்தில் நடைபெறுகிறது.

திருவாரூரில் பிறந்தாலும், தியாகராஜ ஸ்வாமியின் பெயர் சொன்னாலும் முக்திதரும் திருத்தலமாகவும், சைவதிருத்தலங்களில் முதன்மையானதும் ஆகும். தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய இந்தஆழித்தேரோட்டத்தினை காண்பதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி இதரமாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் கூடி ஆரூரா… தியாகேசா….. என தேரை வடம்பிடித்து இழுக்கும் காட்சி கண்கொள்ளா காட்சியாகும். இந்தத் திருக்கோவிலில் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கியமானநிகழ்ச்சி இந்த ஆழிதேரோட்டம்.

தியாகராஜருக்கு உகந்த நட்சத்திரமான ஆயில்யநட்சத்திரத்தில் ஆழிதேரோட்டம் நடைபெறுகிறது. இதற்காக கடந்த மாதம் பந்தக்கால் முகூர்த்தம் நிகழ்ச்சி நடைபெற்றது . நேற்று திருவாரூரில் உள்ள சுந்தரர், பறவைநாச்சியார் கோவிலிலிருந்து நெல்மணிகலுடன் சிறப்புஅலங்காரம் செய்யப்பட்டு பூதகணங்கள் கோவிலுக்கு நெல்கொண்டு வந்ததை நினைவூட்டிடும் வகையில் சிவபக்தர்கள் பூதம் வேடம்அணிந்து நடனமாடி வீதி உலா வந்தனர்.

இந்தஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். அதனையொட்டி இன்று தியாகராஜ சுவாமி திருக்கோவிலில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தநிகழ்ச்சியில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேக ஆராதனைகள் கொடிமரத்திற்கு செய்யப்பட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.


நிகழ்வில் நாகை இந்துசமய அறநிலையத்துறை துணை ஆணையர் இராணி, பரம்பரைஅறங்காவலர் ராம் தியாகராஜன், செயல் அலுவலர் கவியரசு, உள்ளிட்ட ஊர்முக்கியஸ்தர்கள், சிவனடியார்கள், ஆன்மீகபக்தர்கள் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *