
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதி ராமர் கோவில் சன்னதி முதல் தொடங்கி வலங்கைமான் சார்பதிவாளர் அலுவலகம் வழியாக செல்லும் நெடுஞ்சாலைத் துறையின் சாலை, நீண்ட காலமாக பழுதடைந்து மேடு, பள்ளமாகவும், புழுதிகள் கிளம்பி வாகனங்கள் செல்லும் போது ரோட்டில் உள்ள மண் மற்றும் புழுதிகள் காற்றில் பறந்து அந்த சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகனங்கள் மற்றும் நடந்து செல்வோர், இந்த சாலையில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வீடுகள் அனைத்திலும் பரவி பெறும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த சாலை வழியாக அரசு மருத்துவமனை, அரசு மேல்நிலைப்பள்ளி, நீதிமன்றம், தபால் நிலையம், தனியார் பள்ளிகள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், கிளை நூலகம் செல்லும் முக்கிய சாலையாகும் இந்த சாலையில் உள்ள கம்ப்யூட்டர் சென்டர்கள், பேன்சி ஸ்டோர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வந்தனர்.
வலங்கைமானில் புகழ்பெற்ற மகா மாரியம்மன் ஆலய பாடைக்காவடி திருவிழா வருகின்ற மார்ச் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும். காலதாமதம் செய்தால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பொதுமக்கள், வர்த்தகர்கள் இணைந்து போராட்டங்கள் தொடரும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் வடக்கு பட்டம் சி.தட்சிணாமூர்த்தி திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் வலங்கைமான் வட்டாட்சியர் ஆகியோருக்கு ஊருக்கு மனுவை நேரடியாக வழங்கினார்.
இந்நிலையில் சமீபத்தில் வலங்கைமான் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற மகா மாரியம்மன் ஆலய திருவிழா முன்னேற் பாடுகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் இந்தக் கோரிக்கைகளை சமூக ஆர்வலர்கள் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. மேலும் இந்த செய்தி நமது “டைம்ஸ் ஆப் தமிழ்நாடு” செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, தற்போது சார்பதிவாளர் அலுவலகம் முதல் கடைவீதி ராமர் ஆலய சன்னதி வரை நெடுஞ்சாலை துறையால் சீரமைக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து செய்தி வெளியிட்ட “டைம்ஸ் ஆப் தமிழ்நாடு” மற்றும் இதற்கு முயற்சி எடுத்த கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பட்டம் சி. தட்சிணாமூர்த்தி மற்றும் நெடுஞ்சாலை துறையினருக்கு அப்பகுதி பொதுமக்கள், வர்த்தகர்கள் நன்றி தெரிவித்தனர்.