திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் செட்டி தெரு ஸ்ரீ வேம்படி சீதளா தேவி மகா மாரியம்மன் ஆலயத்தில், கடந்த மாதம் 28-ஆம் தேதி வெள்ளிக்கிழமை பூச்சொரிதல் விழா உடன் பங்குனி பெருந்திருவிழா தொடங்கியது.
கடந்த இரண்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் காப்பு கட்டுதல், ஒன்பதாம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் காப்பு கட்டுதல் உடன் தினசரி அம்பாள் வீதி உலா காட்சி நடைபெற்றது. நேற்று 16- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பங்குனி பெருந் திருவிழாவை முன்னிட்டு, அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் தீபாராதனையும் நடைபெற்றது.
காலை 9 மணிக்கு பால்குட ஊர்வலமும், காலை 11 மணியளவில் சிறப்பு அபிஷேக ஆராதனையும் தீபாராதனையும் நடைபெற்று பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. பகல் 12 மணி அளவில் கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மாலை 4 மணி அளவில் ஸ்ரீ அம்பாள் வீதி உலா காட்சி நடைபெற்று ஆலயம் வந்து அடைந்து,
மாலை 6 மணி அளவில் செடில் சுற்றுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வானவேடிக்கை நிகழ்ச்சியும், இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். திருவிழா நிகழ்ச்சி உபயதாரர்கள் வலங்கைமான் ஸ்ரீ எல்லையம்மன் கோவில் தெருவாசிகள், பிரசாத பை உபயதாரர் வலங்கைமான் அருள் லோகேஷ் விலாஸ் பயர் ஒர்க்ஸ் உரிமையாளர் ஏ. அருணகிரி நாதன், ஸ்ரீ அம்பாள் வீதி உலா காட்சியில் குளித்தலை ஜெகநாதன் குழுவினர் ட்ரம்ஸ் செட் இன்னிசை உபயதாரர்கள் கண்ணாடிக்கார தெரு ஜி.ஆறுமுகம், மரம்வெட்டி தெரு ஆர்.முருகேசன், கவித்தலம் ஏ.ராஜமோகன்&பிரதர்ஸ், அணியமங்கலம் குழுவினரின் ட்ரம் செட் உபயதாரர்கள் வரதராஜன்பேட்டைதெரு வி.ஏ.வி.ரமேஷ்,வி.ஏ.வி.ஆர். ராஜ் கிஷோர், இரவு வான வேடிக்கை உபயதாரர்கள் வலங்கைமான் அருணா பயர் ஒர்க்ஸ் உரிமையாளர் ஏ. ரவிச்சந்திரன், வலங்கைமான் டி என் சி எஸ் சி ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தார்கள்.
(திங்கட்கிழமை) காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் தீபாராதனைகளும் நடைபெற்றது. மாலை 4 மணி அளவில் மஞ்ச நீர் விளையாட்டு விழாவை முன்னிட்டு ஸ்ரீ அம்பாள் வீதி உலா காட்சி நடைபெற்றது. இன்றைய மஞ்சள் நீர் விளையாட்டு விழா ஏற்பாடுகளை உபயதாரர் வலங்கைமான் தெய்வத்திரு டி.வீரப்ப பூசாரியார் & குடும்பத்தினர் சிறப்பாக செய்து இருந்தனர்.
பங்குனி பெருந் திருவிழா ஏற்பாடுகளை ஆலய தக்கார் கோ. கிருஷ்ணகுமார், ஆய்வாளர் க.மும்மூர்த்தி, செட்டித் தெரு நிர்வாகிகள், செட்டித் தெருவாசிகள், ஸ்ரீ சீதாளா தேவி இளைஞர் நற்பணி மன்றம், மண்டகப்படி தாரர்கள் மற்றும் நகரவாசிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.