சி சி டிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் சரவணம்பட்டி சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரின் மனைவி சுப்புலட்சுமி. நேற்று முன்தினம் இரவு ஸ்கூட்டர் பல்லடம் வழியாக கோவை நோக்கிச் சென்று கார் முன்னால் சென்ற பைக் மற்றும் ஸ்கூட்டர் மீது மோதியது. இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த கிருஷ்ணகுமார் காயங்களுடன் உயிர்தப்பினார். ஸ்கூட்டரில் இருந்து தூக்கி எறியப்பட்ட சுப்புலட்சுமி காரின் முன் பகுதியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அரை கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட இவரது உடல் கே. என். புரம் நால் ரோடு அருகே விழுந்தது.

இந்த விபத்தை தொடர்ந்து நிக்காமல் சென்ற காரை காரணம்பேட்டை செக்போஸ்ட் பகுதியில் பொதுமக்கள் சிறைபிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். காரை ஓட்டி வந்த சோமனூரைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகன் சதீஷ்குமார் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *