உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டம் 130 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு தேனி மாவட்டம் மாவட்டத்தில் உள்ள 130 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் வருகிற 29 3 2025 இன்று காலை 11 மணியளவில் தனி அலுவலர் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி செயலாளர்களால் கிராம சபை கூட்டம் நடத்தப்பட உள்ளது
இந்த கூட்டத்தினை 130 கிராம ஊராட்சிகளிலும் மிகச் சிறப்பாகவும் கிராம பொதுமக்கள் ஆர்வத்துடனும் கலந்து கொள்ளும் வகையில் கிராம ஊராட்சி பொது மக்களுக்கு கிராம சபை கூட்டம் குறித்து பிராதன இடங்களில் போஸ்டர்கள் ஒட்டியும் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தும் கிராம மக்களுக்கு தெரியுமாறு அனைவரும் கலந்து கொள்ள உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள தனி அலுவலர் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் ஊராட்சி செயலாளர்களும் ஆணையிடப்பட்டுள்ளது எனவே அனைத்து ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டு கூட்டம் சிறப்பிக்க வேண்டுமாய் மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார். இந்த தகவலை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலர் இரா நல்லதம்பி அறிவித்துள்ளார்