எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையார் இயற்கை மீன்பிடித் துறைமுகம் உள்ளது .மீன்பிடி துறைமுகத்தில் படகு அணையதளம் மற்றும் கடலில் மீன் பிடித்த பொழுது மீனவர் விசைப்படகு திடீரென்று தீப்பிடித்து எரிந்தது குறித்து மயிலாடுதுறை எம்பி சுதா நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்பொழுது பழையார் மீனவர்கள் கோரிக்கை மனுக்கள் அளித்துகூறியதாவது , பழையார் துறைமுகம் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. தற்பொழுது பக்கிங்காங் கால்வாயில் படகு ஆணையும்தளம் கட்டுப் பணி நடைபெற்று வருகிறது.
அதனை 500 மீட்டர் கூடுதலாக நீடித்து கட்ட வேண்டும். தற்பொழுது உள்ள பழையார் துறைமுகத்தில்படகு அணையும்தளம் மிகவும் சேதம் அடைந்துள்ளது .சேதமடைந்துள்ள படகும் அணையும்தளத்தில் அடிக்கடி மீனவர்கள் தடுமாறி கீழே விழும் நிலை ஏற்பட்டு வருகிறது .
இதனை தடுக்கும் வகையில் துறைமுகத்தில் உள்ள படகு அணையதளத்தை சுற்றியுள்ள பள்ளங்களை அகற்றி மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பழையார் கிராமத்தில் மீனவர்களுக்கு குடியிருப்பு பட்டா இன்றி உள்ளது எனவே பட்டா இல்லாத மீனவர்களுக்கு குடியிருப்பு பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று மயிலாடுதுறை எம்பி யிடம் கோரிக்கை விடுத்தனர் .
இதுகுறி அரசுக்கு தெரிவித்து விரைவில் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார். பின்னர் பழைய துறைமுகத்தில் தீ விபத்தில் சேதம் அடைந்த விசைப்படகு உரிமையாளர் கோவிந்தன் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி அவர்களுக்கு வங்கி கடன் வழங்க நடவடிக்கை மேற்கொண்டார். அப்பொழுது உடன் காங்கிரஸ் மாநிலபொதுச் செயலாளர் கணிவண்ணன், மாவட்டத் துணைத் தலைவர் சிவராமன், மாவட்ட செயலாளர் பானு சேகர், வட்டாரத் தலைவர்கள் ஞானசம்பந்தம் , பாலசுப்பிரமணியன் தியாக கார்த்திகேயன், ரவி மாவட்ட எஸ்டி பிரிவு தலைவர் கிள்ளிவளவன் மாவட்ட மீனராணி தலைவர் கர்ணன் மாவட்ட பொதுச் செயலாளர் சரவணன் , மீனவர் சங்கப் பிரதிநிதி செந்தில்மற்றும் காங்கிரஸ்கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.