தாராபுரம் செய்தியாளர் பிரபு
9715328420
300-ஏக்கர் வெங்காய சாகுபடி தண்ணீர் இன்றி கருகியதால் விவசாயிகளுக்கு ஒரு கோடி நஷ்டம் ஏற்பட்டதாக மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள கோவிந்தாபுரம் கிராமத்தில், அடிக்கடி பழுதாகும் மின் மாற்றியால் விவசாயிகள் அவதியடைந்துள்ளனா்.
சின்ன புத்தூர் துணை மின்.நிலையத்துக்குள்பட்ட கோவிந்தாபுரம், மற்றும் சத்திரம், பகுதியில் சுமாா் 500-ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய விளைநிலங்கள் உள்ளன. இவற்றிற்கு மின்சாரம் வழங்குவதற்கு அப்பகுதியில் 1- மின்மாற்றி உள்ளது.
இவை பல ஆண்டுகளுக்கு முன்னா் அமைக்கப்பட்டதால் அடிக்கடி மின் விபத்து ஏற்பட்டு தீப்பற்றி எரிவதும் இணைப்பு துண்டிக்கப்படுவதும் அடிக்கடி நிகழும் நிகழ்வாக உள்ளதால் விவசாயிகளுக்கு சீரான மின்சாரம் கிடைப்பதில்லை. இதனால் அப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள சுமாா் 400 ஏக்கா் சின்ன வெங்காயம் மற்றும் தக்காளி மக்காச்சோளம் ஆகிய பயிர்கள் தண்ணீரின்றி வாடத் தொடங்கி விட்டன.
இங்கு இருக்கும் ஒரு மின்மாற்றியை புதிதாக மாற்றி சீரான மின் விநியோகம் செய்ய மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சின்ன புத்தூர் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக உதவி மின் பொறியாளர் கார்த்தியிடம் விவசாயிகள் தெரிவித்தனர் மேலும் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களுக்கு உடனடியாக முன்முனை மின்சாரம் தங்கு தடையின்றி வழங்க வேண்டும் எனவும் தற்பொழுது 23 நாட்களாக மின்சாரம் வழங்காததால் கருகியுள்ள வெங்காயம், தக்காளி, போன்ற பயிர்களுக்கு ரூபாய் ஒரு கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். விவசாயிகளின் இந்த ஆர்ப்பாட்டத்தினால் மின்சார அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் தெரிவிக்கையில்:-
நாங்கள் கடந்த 23- நாட்களாக முன்முனை இலவச மின்சாரம் இன்றி தவித்து வருகிறோம். மின்மாற்றி பழுதாகியும் அதை பலமுறை அதிகாரிகளிடம் எடுத்துக் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை குறைந்த மின்னழுத்தத்தை எங்களுக்கு வழங்குவதால் மின்மோட்டார்கள் சில நேரங்களில் பழுதடைந்து விடுகின்றன. இதனால் டீசல் இன்ஜின் மூலம் தண்ணீர் பாய்ச்சும் பொழுது நாளொன்றுக்கு டீசல் செலவு 5000 ரூபாய் செலவு ஏற்படுகிறது மேலும் சரியான மின்சாரம் வழங்கப்படாத காரணத்தினால் கோழி ஆடு மாடுகளுக்கு தண்ணீர் இன்றி தவித்து வருகின்றன
மேலும் வெங்காயம், தக்காளி போன்ற பயிர்கள் சேதம் அடைந்துள்ளது இதற்கு அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து இழப்பீடுத் தொகை வழங்க வேண்டும் மேலும் தற்போது உள்ள பழைய மின்மாற்றி அருகே மீண்டும் ஒரு புதிய மின்மாற்றி அமைத்து சீரான 230 வோல்ட் மின்சாரத்தை வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் கேட்டுள்ளோம் என இவ்வாறு அவர் தெரிவித்தார்.