தூத்துக்குடியில் அதிமுக பாக கிளை நிர்வாகிகளை நியமிக்கும் பணி மும்மூரம். மாநகராட்சி வார்டுகளில் தெருக்களில் கூட்டம் நடத்தி பாக கிளை நிர்வாகிகள் நியமனம். முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன், மாவட்ட அதிமுக பொறுப்பாளர்கள் பி ஜி ராஜேந்திரன் கல்லூர் வேலாயுதம் பங்கேற்று ஆய்வு.
தூத்துக்குடி
அதிமுகவில் சட்டமன்றத் தொகுதி பாகம் வாரியாக பூத் கிளை நிர்வாகிகளை நியமிக்க அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு அதற்கான மாவட்ட பொறுப்பாளர்களையும் நியமித்து தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் காணொளி காட்சி வாயிலாக அதிமுக நிர்வாகிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார்.
அதன்படி தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், தூத்துக்குடி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பாக கிளை நிர்வாகிகள் நியமிக்கும் பணி மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் தினசரி ஒரு சட்டமன்றத் தொகுதியில் நடந்து வருகிறது.
இந்நிலையில் மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் தூத்துக்குடி தெற்கு பகுதி, முத்தையாபுரம் ராஜீவ் நகர் பகுதியில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்து கொண்ட மாவட்ட பொறுப்பாளர்கள் கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான பி.ஜி.ராஜேந்திரன் மற்றும் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளரும் முன்னாள் மானூர் யூனியன் சேர்மனுமான கல்லூர் வேலாயுதம் ஆகியோர் ஒவ்வொரு பாகமாக ஆய்வு செய்து சரி பார்த்து பூத் நிர்வாகிகளை நியமித்தனர்.
இந்நிகழ்வின் போது மாநில அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெருமாள் சாமி, மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி செயலாளரும் முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான இரா. சுதாகர், கழக வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளரும் தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினருமான வழக்கறிஞர் பிரபு, பகுதிச் செயலாளர்கள் சேவியர், முருகன், ஜெய் கணேஷ், பகுதி பொறுப்பாளர்கள் சுடலைமணி, வக்கீல் முனியசாமி,மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எம்.பெருமாள், இணைச்செயலாளர் ஜோதிமணி, நெல்லை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் கவுன்சிலர் மந்திரமூர்த்தி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அருண் ஜெபக்குமார், மாவட்ட மாணவர் அணி செயலாளர் பில்லா விக்னேஷ், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் கே.ஜே. பிரபாகர், மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் அலெக்ஸ்ஜி, மாவட்ட இளைஞர் இளம் பெண்கள் பாசறை தலைவர் சுந்தரேஸ்வரன் பொருளாளர் பரிபூரண ராஜா, மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் எஸ்.கே மாரியப்பன், மற்றும் சாம்ராஜ் உள்ளிட்ட பலரும் இருந்தனர். தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் வார்டு வாரியாக வட்டச் செயலாளர்கள் பாக கிளை அமைக்கும் பணியை ஏற்பாடு செய்திருந்தனர்.