தொப்பூர் ஜெயலட்சுமி பொறியியல் கல்லூரியில்மின்னணு மற்றும் தொடர்பியல் துறை ELEXA 2025 சங்கம் துவக்க விழா மற்றும் தொழில்துறை ஆற்றல் மேலாண்மை குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
இக்கருத்தரங்கம் கல்லூரியின் மின்னணு மற்றும் தொடர்பியல் துறை சார்பில் நிகழ்வு நடைபெற்றது.இந்நிகழ்வு தொப்பூர் ஜெயலட்சுமி பொறியியல் கல்லூரியின் கலையரங்கத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு ஜெயலட்சுமி பொறியியல் கல்லூரியின் நிறுவனர் அரிமா சுப்பிரமணி மற்றும் தாளாளர் டாக்டர் கோவிந்த் தலைமை வகித்தார்.கல்லூரி செயலாளர் காயத்ரி சுப்பிரமணியம், அறங்காவலர் காயத்ரி கோவிந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
கல்லூரி முதல்வர் தமிழரசு வாழ்த்துரை வழங்கினார்மின்னணு மற்றும் தொடர்பியல் துறைத் தலைவர் ஜோதிலட்சுமி வரவேற்று பேசினார்.மொபேஸ் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தை சேர்ந்த தலைமை மேலாளர் மணிகண்டன் அமைப்பை தொடங்கி வைத்து தொழில் துறை ஆற்றல் மேலாண்மை அமைப்புகள் குறித்த கருத்துரை வழங்கினார்.
நிறைவாக உதவிப் பேராசிரியர் சுமித்ரா நன்றி கூறினார்.நிகழ்வில் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் என பலரும் கலந்துகொண்டனர்.