திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா சித்தரேவு ஊராட்சி நல்லாம்பிள்ளை மற்றும் சாலைப்புதூர் ஆகிய ஊர்களில் மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவரது தேர்தல் வாக்குறுதி படி புதிய பள்ளி கட்டிடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி ஊரக வளர்ச்சி துறை அமைச்சரது உத்தரவின் பேரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பாஸ்கரன். ஆத்தூர் திமுக ஒன்றிய செயலாளர் ராமன் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மலைச்சாமி
ஊராட்சி செயல் அலுவலர் சிவராஜன் மற்றும் கிளை கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
