திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கள் குற்றப்புலனாய்வுத்துறை ஆய்வாளர் சுகுணா தலைமையில் சார்பு ஆய்வாளர் ராதா மற்றும் காவலர்கள் திண்டுக்கல் பழனி பைபாஸ் கொட்டபட்டி பிரிவு அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டபோது வேகமாக வந்த 3 ஆம்னி வேன்களை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் ரேஷன் அரிசி கடத்தி செல்வது தெரியவந்தது இதனைத் தொடர்ந்து போலீசார் 3 ஆம்னி வேன்களில் ரேஷன் அரிசி கடத்திச் சென்ற செல்வமணி(26), முருகபாண்டி(24), அருண்பாண்டியன்(24), வெங்கட்ராமன்(29 ஆகிய 4 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 2500 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.