பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 225 கிலோ எடையுள்ள போதை பொருட்கள் பறிமுதல் ஒருவரை கைது செய்து கபிஸ்தலம் போலீசார் விசாரணை தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலம் பகுதிகளில் கபிஸ்தலம் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது கபிஸ்தலம் காவல் நிலையத்திற்க்கு உட்பட்ட பாலக்கரை பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்து வருவதாக ரகசிய தகவல் போலீசாருக்கு கிடைத்தது.
தகவலின் பெயரில் தஞ்சை மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் பாபநாசம் துணை காவல் கண்காணிப்பாளர் முருகவேல் மேற்பார்வையில் , கபிஸ்தலம் காவல் ஆய்வாளர் மகாலட்சுமி தலைமையில் உதவி காவல் ஆய்வாளர் சசிகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து தடை செய்யப்பட்ட போதை பொருட்களை சட்ட விரோதமாக விற்பனை செய்த இடத்தில் தீவிர சோதனை மேற்கொண்டதில் மேல கபிஸ்தலத்தை சேர்ந்த சுரேஷ் -வயது 52 என்பவரை கைது செய்து அவரிடமிருந்து
ரூ.2 லட்சம் மதிப்பிலான 225 கிலோ போதை பொருட்களான குட்கா பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.