கரூர் செய்தியாளர் மரியான்பாபு
கரூர் மாவட்ட கட்டட பொறியாளர்கள் சங்கத்தின் சார்பாக கட்டிடப் பணிக்கு தேவையான எம்.சேண்ட், பி. சேண்ட் , ஜல்லி ஆகிய கட்டுமான பொருட்களின் கடுமையான விலையேற்றத்தை திரும்பக் கூறி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மாவட்டத் தலைவர் ரவிக்குமார் தலைமையில் கரூர் தாந்தோணி மலை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இரண்டு வருடங்களாக வரலாறு காணாத அளவுக்கு எம். ஸ்டாண்ட், பீ .ஸ்டாண்ட் ஜல்லி ஆகியவை வகையில் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக கட்டுமான தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது நடுத்தர குடும்பத்தினர் வீடு கட்டுவது எட்டா கனியாகவும், கனவாகவும் மாறிவிட்டது.
கட்டுமான துறை சார்ந்த அனைவரும் வேலை இருந்து வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே உயர்த்தப்பட்டுள்ள கட்டுமான பொருட்களின் கடுமையான வெளியேற்றத்தை திரும்ப பெறக்கோரியும் , தமிழ்நாடு அரசு கட்டிட பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையம் அமைத்திட கோரியும் முன் வைத்தனர்.
ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்து அனைத்து கட்டுமானப் பொறியாளர்கள், கட்டிடத்துள்ளார்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்கள் 100மேற்ப்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.
உடன் இத்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் தேவன்ராஜ், மாவட்ட பொருளாளர் பாஸ்கரன், காமராஜ் மார்க்கெட் தலைவர் அசோக்குமார் , பேங்க் சுப்ரமணியன், மாவட்ட வர்த்தக சங்கம் , சேம்பர் ஆப் காமர்ஸ், கட்டிட பொறியாளர் சங்கம், தொழிற்சங்கம் சிறு வியாபாரிகள் சங்கம் என பலர் கலந்துகொண்டனர்.