திருவொற்றியூர் திருச்சினாகுப்பம் பகுதியில் அதிமுக ஆட்சியில் மீனவர்களுக் கென்று இலவசமாக கொடுத்த அடுக்குமாடி குடியிருப்பு…
இரண்டு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் மட்டுமே குடியிருப்பு வழங்கப்படும் என அதிகாரிகள் கூறியதால் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவ பெண்கள்
சென்னை திருவொற்றியூர் கடற்கரை சாலையில் அமைந்துள்ள திருச்சினாங்குப்பம் பகுதியில் கடந்த அதிமுக ஆட்சியில் நகர்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்ட சுமார் 492 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு அது அங்குள்ள மீனவர்களுக்கு அதிமுக ஆட்சியில் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது,
மேலும் கூடுதலாக 360 வீடுகள் நகர்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியம் அதிமுக ஆட்சியில் பூமி பூஜை போடப்பட்டு பின்னர் ஆட்சி மாற்றத்திற்கு பின்பு இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது, இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டுக்கு இரண்டு லட்சம் 40 ஆயிரம் ரூபாய் என வாரியம் நிர்ணயித்துள்ளது ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் இலவசமாக வழங்கப்பட்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பினை மேலும் மீனவர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும், என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்,
நீங்கள் 50 ஆயிரம் ரூபாய் கட்டினால் அனைவரும் வீடுகளில் குடியேறலாம் என கூறிவிட்டு காசோலை மூலம் அனைத்து மீனவர்களும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தைக் பெற்றுக்கொண்டு இதுவரை மீனவர்கள் வீடுகளில் குடியேறாததால் இதைப் பற்றி நகர்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியம் அதிகாரியிடம் கேட்டால் இரண்டு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை முழுமையாக கட்டினால் மட்டுமே வீடுகள் தரப்படும் என கூறியதால் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மீனவர்களுக்கு வழங்க வேண்டிய அடுக்குமாடி குடியிருப்பில் உடனடியாக வழங்க வேண்டும் என மீனவர்கள் ஒன்று திரண்டு எண்ணூர் விரைவு சாலை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு வந்த திருவொற்றியூர் போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்,பின்னர் அதிகாரியிடம் அழைத்துச் செல்வதாக கூறியதால் பின்னர் அனைவரும் கலந்து சென்றனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது,