உத்தமபாளையம் அருகே பெட்ரோல் குண்டு வீச்சு குற்றவாளிகளை கைது செய்ய வேண்டுமென தேசிய செட்டியார்கள் பேரவையின் நிறுவனத் தலைவர் வலியுறுத்தல் தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அம்மாபட்டி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயகாந்த் வயது 38 இவர் தேசிய செட்டியார்கள் பேரவையின் தேனி மாவட்ட பொறுப்பாளராக உள்ளார்
இவரது வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது இதில் இரண்டு இரு சக்கர வாகனங்களும் தீயில் எரிந்து அடியோடு நாசமாயின இந்த சம்பவம் குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து இரண்டு பேரை கைது செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர் இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற தேசிய செட்டியார்கள் பேரவையின் நிறுவனத் தலைவர் பி. எல். ஏ.ஜெகநாத் மிஸ்ரா பாதிக்கப்பட்ட நபர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்
மேலும் இது குறித்து தேசிய செட்டியார்கள் பேரவை நிர்வாகிகளின் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் நிறுவனத் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா பேசினார் இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பி எல் ஏ . ஜெகநாத் மிஸ்ரா கூறும் போது இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசிய முக்கிய குற்றவாளிகளை போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும்
போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மக்களை திரட்டி உத்தம பாளையம் பழைய பைபாஸ் சாலைப் பகுதியில் போராட்டம் நடத்தப்படும் என்றார் இந்த செய்தியாளர் சந்திப்பின்போது 24 மனை தெலுங்கு செட்டியார்கள் பேரவையின் மாநில துணைப் பொதுச் செயலாளர் பி எஸ் பி சுப்புராஜ் மாவட்டத் தலைவர் ஜெ.பி.ஆர் ஜெயபிரகாஷ் தேனி மாவட்ட செயலாளர் பரணி பொருளாளர் கிருஷ்ணசாமி இணைத் தலைவர் பி எஸ் பன்னீர்செல்வம் துணைத்தலைவர் குணசேகரன் துணைச்செயலாளர் எ ராஜ்குமார் மாவட்ட ஆலோசகர் சரவணன் சமுதாய கொள்கை பரப்புச் செயலாளர் முருகன் இளைஞர் அணி செயலாளர் ராமதுரை பொருளாளர் விஜயகாந்த் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் பேரவையின் தலைமை நிலைய செயலாளர் மோகன் மாநில மகளிர் அணி ஒருங்கி ணைப்பாளர் சிவகாமசுந்தரி துணைச் செயலாளர் ரவி உள்ளிட்ட அனைத்து செட்டியார்கள் பேரவை மற்றும் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் பேரவையின் மாவட்ட நகர ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் உடன் இருந்தனர்