புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் மகளிர் நாள் விழா – ஆகச்சிறந்த மகளிர் விருது புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் வி.முத்து வழங்கினார்…
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் மகளிர் நாள் விழா மற்றும் ஆகச்சிறந்த மகளிருக்கு விருது வழங்கும் விழா புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து தலைமையில் நடைபெற்றது. தமிழ்ச்சங்கச் செயலர் கல்விச்செம்மல் சீனு.மோகன் தாசு வரவேற்புரை நிகழ்த்தினார்.
தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் தமிழ்மாமனி ந.ஆதிகேசவன், துணைத்தலைவர் ப.திருநாவுக்கரசு, பொருளர் மு.அருள்செல்வம், துணைச்செயலர் தெ.தினகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து அவர்கள் விருதாளர்கள் முனைவர் ரேகா இராஜா, வழக்கறிஞர் ஜெ.ஜெயலட்சுமி, திருமதி மரிஸ்டெல்லா வரில்,திருமதி சு.மலர்வாணி,முனைவர் மு.வள்ளி ஆகியோருக்கு ஆகச்சிறந்த மகளிர் விருதினை வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வில் எட்டயபுரம் ஜெ.செல்வமுத்துமாரி அவர்கள் சிறப்புரை ஆற்றினர்.
நிகழ்ச்சியில் சுந்தர நாட்டியக் கேந்திராவின் பரதநாட்டியம் மற்றும் கிராமிய நடனம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலைமாமணி முனைவர் இளமதிஜானகிராமன் அவர்கள் தலைமையில் “வீழ்வேனென்று நினைத்தாயோ”என்ற தலைப்பில் பாவரங்கம் நடைபெற்றது.கலை மாமணி மாநி முன்னிலை வகித்தார். எசு.வாசுகி ஸ்ரீராமமூர்த்தி,ந.விஜயா,எ.தரணியா, ஆ.சக்திபிரியா,வி.பிரியதர்சினி, அ.ஹேமலதா,
இர.பரமேசுவரி, ஜெ.ஆனந்தி,ச.ஓவியா, ர.சங்கரி ஆகியோர் கவிதை வாசித்தினர். இந்நிகழ்வில் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தமிழ்மாமனி அ.உசேன், பொறிஞர் மு.சுரேஷ்குமார்,பாவலர் அ.சிவேந்திரன்,பாவலர் இர.ஆனந்தராசன் ஆகியோர் பங்கேற்றனர்.நிகழ்ச்சியின் முடிவில் ஆட்சிக்குழு உறுப்பினர் கலைமாமணி எம்.எஸ்.இராஜா நன்றி கூறினார்.