கமுதி அருகே நெறிஞ்சிப் பட்டி கிராமத்திற்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் ஏற்பாட்டில் புதிய அரசு பேருந்து வசதி ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே நெருஞ்சிப்பட்டி கிராமத்திற்கு பேருந்து வசதி வேண்டி அப்பகுதி பொதுமக்கள் பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்களிடம் கோரிக்கை
வைத்திருந்தனர். அமைச்சர் துரித நடவடிக்கையின் பேரில், நெறிஞ்சிப்பட்டி கிராமத்திற்கு நேற்று புதிய வழித்தட பேருந்து இயக்கப்பட்டது . இந்நிகழ்ச்சியில் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் மனோகரன்,ஊராட்சி மன்ற தலைவர் சண்முகநாதன்,அரசு பேருந்து கமுதி பணிமனை பொது மேலாளர் ராஜ்குமார் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் முருகன் உட்பட திமுக நிர்வாகிகள மற்றும் கிராம பொது மக்கள் கலந்து கொண்டனர்.
