வலங்கைமான் அருகே உள்ள ஆதிச்சமங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற நாட்டு நலப்பணித் திட்ட முகாமில் தொழுவூர் அரசினர் பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தொழுவூர் அரசினர் பல்வகை தொழில் நுட்பக் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் சிறப்பு முகாம், ஆதிச்சமங்கலம் ஊராட்சியில் கடந்த 25-ஆம் தேதி முதல் 7 நாட்கள் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமிற்கு வலங்கைமான் தொழுவூர் அரசினர் பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் ஜான் லூயிஸ் தலைமை வகித்தார்.
முதல்வரின் நேர்முக உதவியாளர் இராம. வேல்முருகன் மற்றும் அனைத்து துறை தலைவர்கள், ஊழியர்கள், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வைரவேல், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை சித்ரா, சமூக ஆர்வலர் ஜெய.இளங்கோவன், யோகா மாஸ்டர் இளையராஜா மற்றும் முன்னாள் இராணுவ வீரர் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவை நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ரெங்கதுரை, சீத்தாராமன் ஆகிய இருவரும் இணைந்து வழி நடத்தினர்.
நாட்டு நலப்பணித் திட்ட முகாமின் போது ஆதிச்சமங்கலம் ஊராட்சியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான லட்சுமி நாராயண பெருமாள் கோயிலை ஆக்கிரமித்து இருந்த செடிகளை அகற்றி உழவாரப்பணியினை மேற்கொண்டனர். நாட்டு நலப்பணித் திட்ட பணிகள் முகாமில் கலந்து கொண்ட கல்லூரி மாணவர்களை கிராம மக்கள் பாராட்டினர்.