திருவொற்றியூர் தியாகி சத்தியமூர்த்தி நகரில் அருள்மிகு மூனிஸ்வர்
வெட்டுடையாள் காளியம்மன் ஆலய கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

திருவொற்றியூர் தியாகி சத்தியமூர்த்தி நகரில் உள்ள அருள்மிகு முனீஸ்வரர் வெட்டுடையாள் காளியம்மன் ஆலயம் குடமுழுக்கு விழா மிக விமர்சையாக நடைபெற்றது

இஸ்லாமியர்கள் வரிசை தட்டுடன் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டனர் அவர்களுக்கு திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே பி சங்கர் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது சுற்று வட்டார பகுதியில் உள்ள திரளான பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது .

திருவெற்றியூர் அடுத்த சத்தியமூர்த்தி நகரில் காவல் தெய்வமாக கருதப்படும் அருள்மிகு முனீஸ்வரர் வெட்டுடையாள் காளியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் தற்போது அந்தக் கோவிலை புதியதாக கட்டப்பட்டு காளியம்மன் சன்னதி முனீஸ்வரர் சன்னதி மற்றும் பரிவார மூர்த்திகளின் சன்னதிகள் அமைக்கப்பட்டு
கடந்த இரண்டாம் தேதி யாக சாலை அமைத்து அதில் முனீஸ்வரர் மற்றும் வெட்டுடையார் காளியம்மன் பரிவார மூர்த்தி களுக்கு வண்ண வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கலசங்கள் வைத்து பின்னர் புண்ணிய நதிகள் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது ஊற்றப்பட்டு தினமும் காலை மாலை என யாக கலசங்களுக்கு நான்கு கால பூஜை செய்து இன்று காலை நான்காம் கால பூஜையில் பூரணாதி செய்யப்பட்டு மங்கள வாத்தியங்கள் மேளதாளம் முழங்க ஊர் நிர்வாகிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் பட்டாச்சாரியார்கள் மற்றும் குருக்கள் தலையில் கடத்தை சுமந்தவாறு கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தனர்.

இதனை யடுத்து கோபுர கலசத்திற்கு பூஜைகள் செய்து பின்னர் புனித நீரானது ஊற்றப்பட்டது இதில் சுற்று வட்டார பகுதியில் உள்ள ஏராளமானோர் வந்திருந்து கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர் அப்பொழுது பக்தர்கள் மீது புனித நீரானது ஊற்றப்பட்டு பின்னர் கோபுர கலசத்திற்கு மகா ஆரத்தி காண்பிக்கப்பட்டது பின்னர் வெட்டுடையார் காளி அம்மனுக்கும் முனீஸ்வரருக்கும் புனித கலச நீரால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

பின்னர் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் திருவொற்றியூர் சேர்ந்த இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்து கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதற்காக சுவாமிக்கு புடவை மற்றும் வேட்டி பூ பழம் வகைகள் உள்ளிட்ட வரிசை தட்டுடன் கோவிலுக்கு வந்து கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டனர் அவர்களுக்கு திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் சால்வை அணிவித்து கலசங்களை வழங்கி மரியாதை செய்தார்.

இதனை அடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டது நீண்ட வரிசையில் நின்று உணவு அருந்தினர்.கும்பாபிஷேகத்தில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆர். டி.மதன்குமார், கிராம ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், கிராம தலைவர் எஸ். மகேந்திரன், பொது செயலாளர் தன்ராஜ், பொருளாளர் சுப்பிரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *