திண்டுக்கல் மாவட்டம் பழனி உழவர்சந்தையில் கடந்த 1-ந்தேதி முதல் மாலை நேரமும் காய்கறி விற்பனை தொடங்கப்பட்டு உள்ளது. காய்கறி மட்டுமின்றி மதிப்பு கூட்டும் பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. மாலை நேர உழவர்சந்தைக்கு பொதுமக்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
அதாவது காலை மட்டுமின்றி மாலையிலும் தரமான மற்றும் குறைந்த விலையில் காய்கறிகள் கிடைப்பதால் பொதுமக்கள், விவசாயிகள் என இரு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது ஒரு புறம் இருக்க பழனியில் தொடங்கப்பட்ட மாலைநேர உழவர்சந்தை குறித்த போதிய அறிவிப்பு பதாகைகளை வைக்க வேண்டும். அதாவது டிராவலர்ஸ் பங்களா மற்றும் திருவள்ளுவர் சாலையில் பொதுமக்கள் கண்டு தெரிந்து கொள்ளும்படி வேளாண் வணிகத்துறை சார்பில், மாலை நேர உழவர்சந்தை குறித்து அறிவிப்பு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்