அரியலூர் மாவட்டம் ,ஆண்டிமடம் ஒன்றியம், சாலைப் பொன்னாங்கன்னி நத்தம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி யில் பள்ளி ஆண்டு விழா பள்ளியின் தலைமை ஆசிரியர் க.சுந்தரவடிவேலு தலைமையில் நடைபெற்றது. பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சில்வியா ஜோஸ்பின் முன்னிலை வகித்தார்கள். பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் தே.ஜெயக்கொடி வருகை தந்த அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

ஆண்டிமடம் வட்டாரக் கல்வி அலுவலர் திரு அ.நெப்போலியன் சுதன் குமார் அவர்கள் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்கள். ஆண்டிமடம் வட்டாரக் கல்வி அலுவலர் திருமதி க.சந்திரலேகா அவர்கள் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவச் செல்வங்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டுரை வழங்கினார்கள். ஆசிரியர் பயிற்றுர்கள் சத்தியபாமா அகிலாஆகியோர் பள்ளி செயல்பாடுகள் குறித்தும், மாணவர் சேர்க்கை குறித்தும் விளக்கிப் பேசி வாழ்த்துரை வழங்கினார்கள்.
பள்ளியின் ஆசிரியர் இரா.வேல்மணி ஆண்டறிக்கை வாசித்து,நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்கள்.பள்ளியின் கணினி ஆய்வக உதவியாளர் ஜான்சி மேரி அவர்கள் கலைநிகழ்ச்சி ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டார்கள்.

முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் பணி நிறைவு பெறுவதனை ஒட்டி கிராம பொதுமக்கள் சார்பில் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் ஆகியோருக்கு முன்னாள் மாணவர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் பெற்றோர்கள் சார்பில் சீர்வரிசை எடுத்துவந்து கோலாட்டம் மற்றும் கும்மி அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆண்டு விழாவில் பணி நிறைபெறும் தலைமை ஆசிரியருக்கு கிராம பொதுமக்கள் சார்பில் சந்தன மாலை, பொன்னாடை அணிவிக்கப்பட்டு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

ஆண்டு விழாவில் வரவேற்பு நடனம்,பாடப் பகுதியில் உள்ள பாடக் கருத்துகளை ஆங்கில உரையாடல் வழியாகவும், பாடலாக பாடியும், பாடப் பகுதியில் உள்ள பாடலுக்கு நடனமாடியும், இயற்கையை பாதுகாப்போம் என்ற தலைப்பில் ஒரு நாடகமும், இதுதாண்டா தீர்ப்பு என்ற தலைப்பில் போதை விழிப்புணர்வு நாடகமும் நடித்து மாணவர்கள் ஆண்டு விழாவிற்கு சிறப்பு சேர்த்தனர்.

மகிழ் முற்றம் செயல்பாடுகளில் சிறந்து விளங்கிய குழுவினருக்கும், ஒவ்வொரு வகுப்பிலும் சிறந்த மாணவர்கள் சிறப்பான வருகை புரிந்தோர் ஆகியோருக்கு சிறப்பு சான்றிதழும் பரிசும் வழங்கப்பட்டது.

பள்ளி மேலாண்மைக் குழு சார்பில் மாணவர்களுக்கு சுகாதாரமான மற்றும் சிறப்பான முறையில் சத்துணவு மற்றும் காலை உணவு தயாரித்து வழங்கி வரும் காலைஉணவுத் திட்ட பணியாளர்கள்,சத்துணவு சமையல் பணியாளர் , பள்ளியை தூய்மையாகப் பராமரிக்கும் பள்ளி துப்புரவு பணியாளர், உள்ளிட்ட அனைவருக்கும் ஆண்டு விழாவில் நினைவுப் பரிசு வழங்கி பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

ஆண்டு விழாவில் முன்னாள் மாணவர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள்,கிராம நாட்டார்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இறுதியில் பள்ளி மேலாண்மைக் குழு துணைத் தலைவர் ஆரோக்கிய எழிலரசி நன்றியுரை ஆற்றினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *