பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்
பாபநாசத்தில் திமுக சார்பில் இல்லம் தோறும் மாணவர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம்….

எம்.பி.கல்யாணசுந்தரம் மாநில மாணவர் அணி துணை செயலாளர் சோலை ராஜன் ஆகியோர் பங்கேற்பு….
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் திமுக கழக மாணவர் அணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி இல்லம்தோறும் மாணவர் அமைப்பை ஏற்படுத்துவதன் துவக்கமாக பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் இல்லம் தோறும் மாணவர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கல்யாண சுந்தரம் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் சோலை ராஜன் தஞ்சை வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர்கள் நாசர், தாமரைச்செல்வன் தியாக சுரேஷ் ,குமார் , பேரூர் கழகச் செயலாளர் கபிலன்,பேரூர் தலைவர் பூங்குழலி கபிலன்,ஆகியோர் கலந்து கொண்டு இல்லம் தோறும் மாணவர்களின் சேர்க்கை முகாம் படிவங்களை மாணவரணி நிர்வாகிகளுக்கு வழங்கி துவக்கி வைத்தனர்.
இதில் சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தலா ஐந்து மாணவர் தொடர்பாளர்கள் வீதம் ஆயிரம் மாணவர்களை இணைக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் பேரூர் நகர மாவட்ட மாநில நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.