கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது.

மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவிக்கையில்,

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழக அரசின் மூலம் பொதுமக்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்காகவும், கிராம மற்றும் நகர்ப்புறங்களில் அடிப்படை உட்கட்டமைப்புகளை மேம்படுத்திடவும் பல்வேறு திட்டங்கள் ஏற்படுத்தி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திட்டங்களின் பயன்களை அனைத்து தரப்பு மக்களுக்கும் பொருளாதார வேறுபாடின்றி கிடைத்திடும் பொருட்டு திங்கள்கிழமைதோறும் மக்கள் தொடர்பு முகாம், நுகர்வோர் குறைதீர் முகாம். முன்னாள் இராணுவத்தினர்களுக்கான குறைதீர் முகாம், ஓய்வூதியதாரர்களுக்கான குறைதீர் முகாம், மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் முகாம், விவசாயிகளுக்கான குறைதீர் முகாம் போன்றவற்றின் மூலம் பொதுமக்களிடமிருந்து ஏராளமான மனுக்கள் பெறப்படுகின்றன.

அதனடிப்படையில் பல்வேறு முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் சம்மந்தப்பட்ட துறைகளான ஊரக வளர்ச்சித் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மாவட்ட சமூக நலத்துறை, வேளாண்மை துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலகு, இந்து சமய அறநிலையத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, காவல் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சுகாதாரத்துறை, கூட்டுறவுத் துறை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், பேரூராட்சித்துறை, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை. பொதுப்பணித்துறை, போக்குவரத்துத்துறை, நீர்வளத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு நேரடியாக வழங்கப்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

துறை சார்ந்த அலுவலர்கள் பொதுமக்களின் நலனை பாதுகாத்து மேம்படுத்திட பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார். இக்கூட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *