கம்பம் போடி பகுதிகளில் மருத்துவ குணம் வாய்ந்த கொடிக்காய் புளி விற்பனை தேனி மாவட்டம் கம்பம் போடி பகுதிகளில் மருத்துவ குணம் வாய்ந்த கொடிக்காய் புளி விற்பனை அமோகமாக நடந்து வருகிறது
மாவட்டத்தில் உள்ள போடி கம்பம் கூடலூர் ஆகிய நகரங்கள் தமிழகம் கேரளாவை இணைக்கும் முக்கிய பாதையாகும் இங்கு உள்ள மலைப்பிரதேசங்களில் விளைவிக்கப்படும் மருத்துவ குணம் வாய்ந்த பழங்கள் காய்கறிகள் போன்றவை எந்தவித உரமும் இல்லாமல் இயற்கையாக வனப்பகுதிகளில் விளைவிக்கப்பட்டு இதனை அங்குள்ள விவசாயிகள் பறித்து கம்பம் போடி போன்ற நகரங்களில் விற்பனை செய்கின்றனர்
இதன்படி வருடத்தில் பங்குனி சித்திரை போன்ற கோடைகால மாதங்களில் மட்டுமே விற்பனைக்கு வரும் கொடிக்காய்ப் புளி இயற்கையாக எந்த ஒரு மருந்தும் வைக்கப்படாமல் விளைவிக்கப்பட்ட மருத்துவ குணம் வாய்ந்த கொடிக்காய் புளி கிலோ ரூபாய் 300க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது
இதனை இப்பகுதி மக்களும் மருத்துவ குணம் வாய்ந்தது என்பதால் மிகவும் ஆர்வமாக வாங்கி செல்கின்றனர் இந்த கொடிக்காய் புளி சாப்பிட்டால் தைராய்டு சுகர் பிரஷர் போன்ற நோய்கள் குணமாகும் என்பது மருத்துவ ரீதியாக கண்டுபிடிக்கப்பட்ட கண்டுபிடிப்பாகும் இதனை சாப்பிடும் போது துவற்பாகவும் அடுத்து இனிப்பாகவும் காணப்படும் எந்தவித பக்க விளைவுகளும் இல்லாமல் மருத்துவ குணம் வாய்ந்த கொடிக்காய் புளியை இப்பகுதி மக்கள் மிக ஆர்வமாக வாங்கி செல்கின்றனர்