மேட்டூர் மின் விநியோக வட்டத்தின் சார்பில் மின் நுகர்வோர்களுக்கான முகாம் இன்று மேட்டூர் மின்விநியோக வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது இதில் கலந்துகொண்ட மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர்
எஸ்.சதாசிவம் பொதுமக்களிடமிருந்து மின் துறை சம்பந்தமான புகார் மனுக்களை பெற்று அதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்
மேலும் அவர் பேசுகையில் வருகின்ற மேட்டூர் தொகுதியில் சேதமடைந்த மின் கம்பங்களை கணக்கெடுத்து விரைந்து புதிய கம்பங்கள் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் வணிக பயன்பாட்டுக்கு புதிய மின் இணைப்புக்கு முக்கியத்துவம் தரும் மின்சாரத்துறை விவசாய மின் இணைப்புக்கு விண்ணப்பித்து பல ஆண்டுகளாக காத்திருக்கும் விண்ணப்பத்தாளர்களுக்கு விரைந்து மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செயற்பொறியாளர் ரவி செயற் பொறியாளர் ஏழுமலை உதவி செயற்பொறியாளர்கள் சரவணகுமார் சங்கர் மயில்சாமி உதவி பொறியாளர்கள் ராஜா சங்கர் செந்தில்குமார் தம்பிதுரை சங்கர் தினேஷ்குமார் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்