தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
குண்டடத்தில் பெய்த கோடை மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குண்டடம் பகுதியில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்த நிலையில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்நிலையில் இன்று மாலை திடிரென பெய்த கனமழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். குண்டடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மேட்டுக்கடை, ருத்ராவதி, சூரிய நல்லூர், வரப்பாளையம், வேங்கி பாளையம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதே போல் விவசாயிகள் தங்கள் பயிர்களுக்கு போதிய தண்ணீர் இன்றி தவித்து வந்த நிலையில் கோடை மழை மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.