தமிழக அரசு அரசு துறையில் உள்ள காலியிடங்களை தேர்வாணையங்கள் மூலம் தொடர்ந்து நிரப்பி வருவது போட்டித்தேர்வர்கள் மத்தியில் மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்திஉள்ளது. TNPSC கடந்த 1/4/2025 அன்று குரூப்1 தேர்வுக்கான அறிவிப்பையும்,4/4/2025 அன்று தமிழ்நாடு சீருடை பணியாளர் குழுமம் SI தேர்வுக்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து குரூப்4,2 அறிவிப்புகளும் வெளிவர உள்ளன. தேர்வாணையங்கள் இவ்வாறு தேர்வுகளை அறிவிப்பதை தேர்வர்கள் முறையாக பயன்படுத்தி வெற்றி பெற்று அரசு பணிகளில் அமர முயலுங்கள்.

தேர்வுகளையோ அல்லது வினாத்தாள்களையோ குறை கூறாமல் அதன் பாதையிலேயே பயணிக்க பழகுங்கள்.ஒரு சில தேர்வுகள் கடினமாகவும்,ஒரு சில கேள்வித்தாள்கள் எளிதாகவும் இருப்பதாக கருத்துக்கள் நிலவுவது வழக்கமான ஒன்றே.ஆனால் தேர்வாணையம் அதற்கான கால இடைவெளியை வழங்கியே தேர்வுகளை நடத்துகின்றன.

எனவே தேர்வுகள் குறித்த எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து வெற்றி என்ற ஒன்றை மட்டும் இலக்காக கொண்டு தேர்வுகளுக்கு தயாரானால் அரசு வேலை உறுதி. முறையாக தயார் செய்பவர்கள் அரசு பணிகளை பெற்றுகொண்டே தான்உள்ளனர் என்பது அனைவரும்அறிந்த ஒன்றே.. எனவே போட்டித்தேர்வர்கள் தேர்வுகளை குறை கூறாமல் அதன் பாதையிலேயே பயணிக்க வேண்டும் என ஆயக்குடி மரத்தடி மையம் சார்பில் அறிவுறுத்துகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *