பாபநாசம் செய்தியாளர்
ஆர். தீனதயாளன்.
பாபநாசம் அருகே புள்ளபூதங்குடி பிரசித்திபெற்ற ராமர் திருக்கோயில் தேரோட்டம்….

ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா புள்ளபூதங்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற
ஸ்ரீ வல்வில் ராமஸ்வாமி திருக்கோவில் இராமநவோமியை முன்னிட்டு கோவில் நிர்வாகி ரெங்கராஜன் தலைமையில் தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது.
இதில் ஸ்ரீ வல்வில் ராமஸ்வாமி தேரில் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.சிறப்பு பூஜைகள் ஆராதனைகள் செய்து மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது .
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து தேரை ராமா ராமா என்று கோஷமிட்டு முக்கிய வீதிகள் வழியாக மேல தாளங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.