செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூர்
காவல் நிலையத்திற்கு கேழ்வரகு கூழ் சமூக சேவகர் வழங்கினார்.
கோடை காலம் தொடங்கி கடுமையான வெயில் வாட்டி வதைத்து வரும் சூழலில் பொதுமக்களுக்கு இளநீர் தர்பூசணி வெள்ளரிக்காய் கேழ்வரகு கூழ் சமூக சேவகர்
க.சந்துரு வழங்கி வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக மேல்மருவத்தூர் காவல் நிலையத்தில் இரவு பகல் பாராமல்
பணி புரியும் காவலர்களுக்கு கேழ்வரகு கூழ் வழங்கினார்.
அப்போது எழுத்தர் கதிர் காவல் நிலைய காவலர்கள் உடனிருந்தனர்.