கோவையில் நடைபெற்ற கோயம்புத்தூர் டிராவல் ஏஜெண்ட் அசோசியேஷன் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

கோயம்புத்தூர் டிராவல் ஏஜெண்ட் அசோசியேஷனின் 5 வது பதவியேற்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது கோயம்புத்தூர் டிராவல் ஏஜெண்ட் அசோசியேஷன் (TAAC) கடந்த சில வருடங்களாக செயல்பட்டு வருகிறது…

சுற்றுலா துறையை மேம்படுத்தும் வகையில் செயல்பட்டு வரும் டாக் (TAAC) அமைப்பின் 5 வது புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா அவிநாசி சாலையில் உள்ள தி ரெசிடென்சி டவர்ஸ் ஹோட்டல் அரங்கில் நடைபெற்றது இதில் புதிய தலைவராக செல்வராஜு, செயலாளராக விஷ்ணு வசந்த் குமார், மற்றும் பொருளாளராக ப்ரஜேஷ் ஆகியோர் பொறுப்பேற்று கொண்டனர் இதனை தொடர்ந்து புதிய செயற்குழு மற்றும் ஆலோசனைக்குழு உறுப்பினர்களும் அறிவிக்கப்பட்டனர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய வர்த்தக சபை கோவை கிளை தலைவர் ராஜேஷ் லுந்த் கலந்து கொண்டு பேசினார் அப்போது பேசிய அவர்,ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சுற்றுலா துறை முக்கிய பங்கு வகிப்பதாக கூறிய அவர்,உலக நாடுகளின் தொடர்புகளை இணைப்பதில் சுற்றுலா துறை தவிர்க்க முடியாத இடத்தில் இருப்பதாக குறிப்பிட்டார்…

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்ச்சியில் கவுரவ விருந்தினராக கலந்து கொண்ட கொடிசியா தலைவர் கார்த்திகேயன் பேசுகையில்,

நவீன தொழில்நுட்பங்களை சுற்றுலா சேவைகளுடன் ஒருங்கிணைப்பதன் மூலம் மட்டுமே இந்த துறையில் நிலைத்த வளர்ச்சி சாத்தியமாகும். இந்த புதிய நிர்வாகம் அந்த பாதையை நோக்கி உறுதியுடன் செல்வது பாராட்டத்தக்கது என தெரிவித்தார்..

விழாவில் ஈரோடு டூர் அசோசியேசன் உட்பட சுற்றுலா துறை நிறுவனங்களை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *