அணைக்கட்டு,பள்ளிகொண்டாவில் நடந்த காளை விடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 21 பேர் காயம் அடைந்தனர். சில காளைகள் சாலையில் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.அணைக்கட்டு அடுத்த பள்ளிகொண்டாவில் 70 – ம்
ஆண்டாக காலை விடும் விழா நடந்தது.

இதனை ஒட்டி வாணியம்பாடி பரதராமி திருப்பத்தூர் குடியாத்தம் நாட்றம்பள்ளி கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து இருந்து காளைகள் அவற்றின் உரிமையாளர்கள் நேற்று முன் தினம் இரவு முதலே அழைத்து வந்த வண்ணம் இருந்தனர்
அதிகாலை முதல் காளைகளுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி நடந்தன இதில் 250க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. விழாவை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, அசாப் இன்ஸ்பெக்டர் முரளிதரன் வட்ட வழங்கல் அலுவலர் யுவராஜ், பள்ளிகொண்டா பேரூராட்சி மன்ற தலைவர் சுபா பிரியா குமரன், துணைத் தலைவர் வசீம் அக்ரம், கவுன்சிலர் நாராயணன், வருவாய் ஆய்வாளர் அனுசுயா ஒரு நாட்டாமை விழா குழுவினர் மற்றும் இளைஞர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டு கொடியாசித்து காலை ஒரு விழாவை தொடங்கி வைத்தனர்.
கால்நடை மருத்துவர் காலைகளை பரிசோதனை செய்த பிறகு ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இளைஞர்களில் மதில் காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின காளைகள் முட்டியதில் சுமார் 15 – க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அங்கு முகாமிட்டிருந்த மருத்துவ குழுவினர் உடனடியாக அவர்களுக்கு சிகிச்சை வழங்கினர். சுட்டெரிக்கும் வெயில் தாக்காதவாறு இளைஞர்கள் தலை மேல் பசுந்தழை கிளை போர்த்திக்கொண்டு நிகழ்ச்சி முடியும் வரை காளைகளை ஓடுவது ரசித்தனர்.