கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூர் கிழக்கு ஒன்றியம் அச்சம புரம் கிராமத்தில் வீடு வீடாக சென்று துண்டறிக்கை வழங்கினார் மாவட்டச் செயலாளர் பி எம் கே பாஸ்கரன் கரூர் ஒன்றியம் அச்சமபுரம் கிராமத்தில் சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு குறித்து கிராம பொது குழு கூட்டம் நடைபெற்றது.
கரூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் வே விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கரூர் மாவட்ட செயலாளர் பி எம் கே பாஸ்கரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வீடு வீடாக சென்று துண்டறிக்கை வழங்கினார்.
மருத்துவர் அய்யா ராமதாஸ் மற்றும் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் சார்பில் அழைப்பு விடுத்தார் இவர்களுடன் மாவட்ட தலைவர் சோ தமிழ் மணி ,
மாநில செயற்குழு உறுப்பினர் ம மணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணி, வன்னியர் சங்கம் மாவட்ட தலைவர் பெ ரமேஷ், மாவட்ட உழவர் பேரியக்கம் செயலாளர் அழியாபுரம் தங்கவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பூபதி,ஒன்றிய தலைவர் பிரபு இளைஞர் அணி செயலாளர் யாதவன், மாவட்ட மகளிர் அணி தலைவர் சா மஞ்சுளா, உத்திரகுமார் முருகேசன்,மூர்த்தி பாலு,அலெக்ஸ் வீ.விஸ்வநாதன், அரங்கம் கணேசன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.