கும்பகோணத்தில் வக்ஃபு வாரிய சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற கோரிஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்….
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில்
பாஜக ஒன்றிய அரசின் வக்ஃபு வாரிய சட்டத் திருத்தத்தை உடனே திரும்பப் பெற கோரியும், சிறுபான்மை மக்கள் மீதான பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் கும்பகோணம் தலைமை அஞ்சலகம் முன்பு மாவட்டச் செயலாளர் மு.அ.பாரதி தலைமையில் நடைபெற்றது.
போராட்டத்தின் நோக்கங்களை விளக்கி ஏஐடியூசி மாவட்ட செயலாளர் ஆர்.தில்லைவனம் உரையாற்றினார்.
மாவட்ட பொருளாளர் ஏ.ராஜேந்திரன் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் தங்க.சக்கரவர்த்தி, டி.ஆர்.குமரப்பா, ஏ.ஜி.பாலன் மாதர் சம்மேளனத்தின் மாவட்ட செயலாளர் பா.சரண்யா ஒன்றிய செயலாளர் பொன்.சேகர், எம்.வெங்கடேசன், ஏ.எம்.ராமலிங்கம், கே.ரவி மற்றும் முன்னணி நிர்வாகிகள் கே.சரவணன், வி.காமராஜ், எம்.மணிகண்டன், மார்க்கெட்.ரவி, குரு.சிவா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.