செய்தியாளர் வெங்கடேசன்.
நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நவீனரக ஹைடெக் தண்ணீர் பந்தல் அமைச்சர் துவக்கி வைத்தார்:-
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நவீன ஹைடெக் (Hitech) தண்ணீர் பந்தலை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி இன்று திறந்து வைத்தார்.
தமிழகத்தில் தற்போது கோடை காலம் வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது ஆகையால் வெப்பத்தில் இருந்து மக்கள் தாகம் தணிக்கவும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தண்ணீர் பந்தல் வைக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்த நிலையில் நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் , நாள் ஒன்றுக்கு சுமார் 500 லிட்டர் குடிநீர் சுத்திகரிப்பு செய்யக்குடிய கருவியுடன் அமைந்துள்ள நவீனரக தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நேற்று காலை 10.00 மணிக்கு நடந்தது.
நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் வடிவேலு தலைமை வகித்தார், மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் பவானி வடிவேலு வரவேற்றார். நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி கலந்துகொண்டு நவீனரக தண்ணீர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி, இளநீர் மற்றும் கூல் டிரிங்க்ஸ் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.
உடன் நிர்வாகிகள், புருஷோத்தமன், முகமது அப்துல் ரகுமான், அரிக்கிருஷ்ணன், அப்துல் நசீர். கருணாகரன், பழனி, கோகுல், மற்றும் ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து இதற்கு முன்னதாக
நெமிலி அடுத்த சேந்தமங்கலம் பகுதியில் நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நவீன தண்ணீர் பந்தலை அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார் உடன் ஒன்றிய குழு தலைவர் வடிவேலு.