திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 8வது வார்டு பில்டிங் சொசைட்டி தெருவில் ரூ. 71.49 லட்சத்தில் சிமென்ட் சாலை, சிறுபாலம், வாய்க்கால், தடுப்புச்சுவர், அமைத்தல், ரூ. 1.25 கோடியில் பேரூராட்சிக்கு புதிய கட்டடம் கட்ட ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி அடிக்கல் நாட்டினார்.
இதில் மாவட்ட ஆட்சியர். சரவணன் தலைமை வகித்தார். வடக்கு ஒன்றிய செயலாளர் முருகன், நகர செயலாளர் சின்னதுரை முன்னிலை வகித்தனர். பேரூராட்சித் தலைவர் சிதம்பரம், துணைத் தலைவர் தர்மலிங்கம் வரவேற்றனர்.
பேரூராட்சி கவுன்சிலர்கள், செயல் அலுவலர் சரவணகுமார், பணியாளர்கள் பங்கேற்றனர். புதுப்பட்டி காந்தி நகரில் தலா ரூ. 15 லட்சம் செலவில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் திறந்து வைக்கப்பட்டன.
