தமிழ்நாடு மாநிலத்திற்கு உட்பட்ட திருவாரூர் மாவட்டம் பேரளம் மற்றும் புதுச்சேரி மாநிலத்திற்கு உட்பட்ட காரைக்கால் இடையே புதிதாக அகல ரயில் பாதை பணிகள் நடைபெற்ற வருகின்றன. இதற்காக கரூரிலிருந்து ஜல்லிகளை ஏற்றிக்கொண்டு காரைக்கால் நோக்கி கனரக லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே கோவில்திருமாளம் பகுதியில் அதிவேகமாக சென்ற லாரி வளைவில் வேகமாக திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சாலையோரம் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த வரகூர் கிராமத்தை சேர்ந்த மோகன் ( 35) மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் நிரோஷன் (7), வியாஸினி (4) உட்பட மூவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலி. லாரியை ஒட்டி வந்த ஓட்டுநர் விக்னேஷ் தப்பி ஓடினார். விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *