மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி திண்டுக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் திண்டுக்கல் பள்ளி கல்வித்துறை இணைந்து திண்டுக்கல் மாவட்டம் தாமரைபாடி கிராமத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான தீவிர மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் மாவட்ட கல்வி அலுவலர்.வெற்றிச்செல்விவரவேற்புரையாற்றினார். மாவட்ட முதன்மை நீதிபதி,தலைவர் மாண்புமிகு.முத்து சாரதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்றும், அரசு பள்ளியில் சேர்ப்பதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், அரசு பள்ளிகளில் வழங்கப்படும் சலுகைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
மேலும் இந்நிகழ்வில் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர். திரிவேணி, வட்டார வளர்ச்சி அலுவலர்.அண்ணாதுரை.வட்டார கல்வி அலுவலர் 1. முருகேசன, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு அரசு பள்ளிகளின் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.
வட்டார கல்வி அலுவலர் 2.ஜெபசுதா நன்றியுரையாற்றினார்.இந்நிகழ்ச்சியின் போது 9 மாணவர்கள் உடனடியாக தாமரைப்பாடி நடுநிலைப் பள்ளியில் சேர்த்து கொள்ளப்பட்டனர்.