பள்ளிகொண்டா பேரூராட்சியில் 21 ஆம் தேதிக்குள் கொடிக்கம்பங்களை அகற்ற அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் பேரூராட்சி செயல் அலுவலர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
பள்ளிகொண்டா பேரூராட்சியில் கோர்ட் ஆணைப்படி கொடிக்கம்பங்களை அகற்றுவது தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கூட்டம், பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி தலைமை தாங்கி பேசினார்.
அப்போது பள்ளிகொண்டா பேரூராட்சி பகுதிகளில் உள்ள கொடிக்கம்பங்களை சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்கள் வருகிற 21ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும். அதன் பிறகும் கொடிக்கம்பங்களை அகற்றாவிட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் வழங்கி, கொடிக்கம்பங்களை அகற்றி அதற்கான செலவை சம்பந்தப்பட்ட கட்சிகளிடம் வசூலிக்கப்படும் என்றார். கூட்டத்தில் பேரூராட்சி தலைவர் சுப பிரியா குமரன், துணைத் தலைவர் வசீம் அகரம், அலுவலக பணியாளர்கள், அனைத்துக் கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் வியாபார நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தமிழ் பெயர் பழக வைப்பதற்கு வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் முழு ஒத்துழைப்பு தருவதாக தெரிவித்தனர். பெயர் பலகை 15 நாட்களுக்குள் அனைத்து கடைகளின் முன்பு வைக்க வேண்டுமென செயல் அலுவலர் உமாராணி வலியுறுத்தினார்.