செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் மின்னல்சித்தாமூர் ஊராட்சி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 88 ம் ஆண்டு
விழா பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
ஆணைக்கிணங்க வட்டார கல்வி அலுவலர்கள் எஸ்.பழனிவேலன் வெ.கிருஷ்ணா
ஆகியோரின் ஆலோசனைப்படி தலைமை ஆசிரியர் சு.சந்திரா
தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் சி.பாலாஜி முன்னிலையில் ஆண்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
மின்னல்சித்தாமூர் ஊராட்சி ஒன்றிய நடுலைப் பள்ளியின் 88-ஆம் ஆண்டு விழாவை
முன்னிட்டு பள்ளி சிறார்களின் கலை நிகழ்சிகள், சிறந்த மாணவ செல்வங்களுக்கு விருது வழங்குதல், கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பரிசினை ஆதிதிராவிடர் நலத்துறை துணை அமைப்பாளர் பெரும்பேர்கண்டிகை
ஜி.சிவகுமார் வழங்கினார்.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக அச்சிறுப்பாக்கம் ஒன்றிய குழு பெருந்தலைவர் ஒரத்தி கே.கண்ணன் இளைஞர் அணி அமைப்பாளர் க.பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களிடையே சிறப்புரையாற்றினர்.இதில் பொறுப்பாசிரியர் ச.பாலமுருகதாஸ் உதவி ஆசிரியர்கள் அ.யாஸ்மின் வி.கிருஷ்ணகுமார் ஏ.அனிதா வே.அருணா மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் தலைவர் ப.விமலா துணைத் தலைவர் வே.லதா உட்பட பெற்றோர்கள், தன்னார்வலர், பள்ளியின் முன்னாள் மாணவர்கள், கிராம பொதுமக்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.