துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் பாலக்கரை அருகே உள்ள கௌரி மகாலில் துறையூர் பெருமாள் மலை ரோட்டரி சங்கம் சார்பில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
துறையூர் கௌரி மஹாலில் ஏப்ரல் 12 ஆம் தேதி துறையூர் பெருமாள்மலை ரோட்டரி சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவமனை என்.நடராஜன் நினைவு அறக்கட்டளை மற்றும் புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரி ரோட்டராக்ட் சங்கம், திருச்சி மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் சார்பில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
இம்முகாமிற்கு மாவட்ட துணை ஆளுநர் ஏஜி செந்தில் குமரன் தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தார்.இதில் சங்கத் தலைவர் டி.எம்.செந்தில் முன்னிலை வகித்தார்.இதில் செயலாளர் ஜி.சேதுபதி, பொருளாளர் விவேகானந்தன், ரமேஷ், சங்க சேவைத் திட்ட இயக்குநர் ரமேஷ்,கண் சிகிச்சை முகாம் சேர்மன் என்.நந்தகுமார் ஆகியோர் முகாம் ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
இம்முகாம் காலை 9மணிக்கு ஆரம்பித்து மதியம் 1 மணி வரை நடைபெற்றது.இம்முகாமில் கோவை சங்கரா கண் மருத்துவர் பிரதிக், செவிலியர்கள் தனலட்சுமி, உதயா, யாழினி ,கிரண், முகாம் அமைப்பாளர் ரமேஷ் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் கண் மருத்துவ பரிசோதனையில் ஈடுபட்டனர்.
இதில் கிட்ட பார்வை, துரப்பார்வை, கண்ணில் சீழ் வடிதல், கண்ணில் சதை வளர்ச்சி,பார்வை மங்கல்,கண்ணீர் நீர் வடிதல்,கண்ணில் நீர் அழுத்தம்,கண்புரை நோய்,தலைவலி,உள்ளிட்ட கண் சம்மந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டது.
இம்முகாமில் சுமார் 200 நபர்கள் கலந்து கொண்டனர்.இதில் சுண்புரை மற்றும் கண் அறுவை சிகிச்சைக்கு சுமார் 140 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு முகாம் நாளன்றே கோவை சங்கரா கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.கோவை சங்கரா கண் மருத்துவமனைக்குச் சென்றுவர போக்குவரத்து வசதி, உணவு, இருப்பிடம், ஸ்கேன் பரிசோதனை, மருந்துகள் ஐஒஎல் லென்சுடன் கூடிய கண்புரை அறுவை சிகிச்சை ஆகியவை அனைத்தும் இலவசமாக வழங்கப்படும் என முகாம் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இம் முகாமில் பெருமாள் மலை ரோட்டரி சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் புத்தனாம்பட்டி நேரு கல்லூரி ரோட்டராக்ட் மாணவிகள் ரீனா, வித்யா, புவனா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்