டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 135 வது பிறந்தநாள் விழா
திருவுருவ சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மேற்கு மாநில இணை செயலாளர் முனைவர் மூ. லாவண்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

உழவர் கரை சட்டமன்ற தொகுதி பிச்சவீரான் பேட் உள்ள அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மேற்கு மாநில இணை செயலாளர் முனைவர் லாவண்யா அவர்கள் புரட்சியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் பேனா பென்சில் 250 பேருக்கு வழங்கினர்.

பிச்சை வீரன்பேட் மக்களுக்கு மதியம் அசைவ பிரியாணி 500 பேருக்கு வழங்கினார்.
மேலும் தக்க குட்டை பகுதிகளில் அமைந்துள்ள புரட்சியார் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மற்றும் அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவ, மணவிகளுக்கு 200 பேருக்கு நோட்டு பேனா பென்சில் வழங்கினார். மதியம் 300 நபர்களுக்கு அசைவ பிரியாணி வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாநில அம்மா பேரவை செயலாளர் பிரகாஷ், மேற்கு மாநில வர்த்தக பிரிவு செயலாளர் தனவேல், மேலவை பிரதிநிதி லூர்துசாமி, பிச்சவீரான் பேட்டை சார்ந்த முருகன், ஐயப்பன், செல்வமணி, வேலு, அன்பழகன், வெங்கடேஷ், ஆதிமூலம், குமார், அன்பழகன், மீனாட்சி, அழகப்பன், முத்துபிள்ளை பாளையம் ராஜி, பிரசாத், அருள்பாண்டி, சிவபாலன், செல்வம், ஐயப்பன், யுவராஜ், ஜெயபால், கண்ணன், சரளா, உமா, சந்திரா, அமலா, தெய்வானை, மற்றும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பிச்சவீரான் பேட் பொது மக்கள் புரட்சித்தலைவி அம்மா அவர்களை உலக தமிழர் அனைவரும் அம்மா என்று அன்போடு அழைத்தார்கள். உங்களை பார்க்கும்போது புரட்சித்தலைவி அம்மாவின் மறு உருவமாக பார்க்கிறோம் ஆகையால் நீங்கள் புதுச்சேரியின் புரட்சித்தலைவி நீங்கள் என்று கரகோஷம் எழுப்பிய தால் அப்பகுதி விழாக்கோலம் பூண்டது.