புதுச்சேரி அரசு ஊரக வளர்ச்சித்துறை, புதுவை மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் , காரைக்கால் வட்டார வளர்ச்சி அலுவலகம், காரைக்கால் வட்டார அளவிலான கூட்டமைப்பின் மூலம் காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள சேம்பர் ஆஃப் காமர்ஸ் கட்டிடத்தில் சுய உதவிக் குழுக்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் குழுக்களின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் தீபாவளி அங்காடி மற்றும் கிராம சந்தை துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அதிகாரி அருணகிரிநாதன்அவர்கள் கலந்து கொண்டு சுய உதவிக் குழுக்களின் பொருட்களை விற்பனை செய்யும் யுக்திகளை பற்றியும், வாழ்வாதாரத்தை உயர்த்த தகுந்த தொழிலை தேர்ந்தெடுத்து உரிய முறையில் வணிக ரீதியீலான முறையில் விற்பனை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் இணை வட்டார வளர்ச்சி அலுவலர், விரிவாக்க அலுவலர் கிராம சேவக் சேவக் வட்டார அளவிலான கூட்டமைப்பின் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் மேலாளர், கணக்காளர் வட்டார மேலாளர்கள் பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பின் நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் சமூக வல்லுனர்கள் கணக்காளர்கள் சிஆர்பிஸ் ஜெண்டர் சிஆர்பிஸ் மற்றும் சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்கள், மாற்று திறநாளிகள் சுய உதவிக் குழுவின் உறுப்பினர் உற்பத்தியாளர்கள் குழுக்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.