தாராபுரம் செய்தியாளர் பிரபு.
செல் :9715328420
தாராபுரம் சாலை வரி பெட்ரோல் டீசல் டயர் உள்ளிட்ட உதிரிபாகங்கள் விலை ஏற்றத்தை மத்திய மாநில அரசுகள் உடனடியாக குறைக்க வலியுறுத்தி தமிழ்நாடு ஜேசிபி உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் முதல் மூன்று நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்துள்ள குண்டத்தில் ஜேசிபி உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் ஏப்ரல் 15 முதல் 17-ஆம் தேதி வரை மூன்று நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் 100-க்கு மேற்பட்ட ஜேசிபி உரிமையாளர்கள் ஜேசிபி வாகனங்களை குண்டடம் கனரா வங்கி எதிரே நிறுத்தி வேலைநிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்
போது டீசல் விலை உயர்வு, உதிரி பாகங்களின் விலை உயர்வு, புதிய வண்டி விலை உயர்வு, இயந்திர இயக்குனர் சம்பளம் மற்றும் இன்சூரன்ஸ் கட்டணங்களின் உயர்வு, போன்றவற்றால் ஏற்படும் தொழில் பாதிப்பு நிலவும் அனைத்து வாகன உரிமையாளர்களுக்கும் ஒன்றிணைந்து ஒரே கட்டணம் நிர்ணயம் செய்ய வலியுறுத்தியும், விலை உயர்வுக்கு காரணமான மத்திய மாநில அரசுகளை கண்டித்து வாகனங்களை இயக்காமல் நிறுத்தி குண்டடம் சோத்தையும் பட்டி சங்க பாளையம் மேட்டுக்கடை ருத்ராவதி கொக்கம்பாளையம் இடையன் கிணறு சூரியநல்லூர் நவனாரி ஈஸ்வரசெட்டிபாளையம் வஞ்சிபாளையம் உப்பார் டேம் ,உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஜேசிபி இயந்திர உரிமையாளர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜேசிபி சங்கத்தினர் கூறுகையில்:-
மத்திய மாநில அரசுகள் டீசல் விலையை குறைத்தால் மட்டுமேஜேசிபி ஆபரேட்டர்கள் லாபம் சம்பாதிக்க முடியும் தொடர்ந்து மத்திய அரசு டீசல் விலை உயர்வு. ஜேசிபி ஆப்பரேட்டர் உங்களுடைய தொழிலை நசுக்கிக் கொண்டு வருகிறார்கள் இதனால் ஜேசிபி இயந்திரத்தின் வாடகையை உயர்த்த முடியாமல் இருந்து வருகிறோம். எனவே ஜேசிபி யின் தொடக்க கட்டணம் 3000 எனவும் அதை அடுத்து அடுத்தடுத்து தொடர்ந்து ஓடும் ஜேசிபி இயந்திரங்களுக்கு மணிக்கு வாடகை 1500 என நிர்ணயிக்க வேண்டும். என இவ்வாறு அவர் தெரிவித்தார்.