திருவெற்றியூர் மண்டல கூட்டம் 32 வது கூட்டம் நடைபெற்றது.
திருவொற்றியூர்
திருவொற்றியூர் மண்டல குழுவின், 32 வது கூட்டம், தி.மு.க., மண்டல குழு தலைவர் தனியரசு தலைமையில், நேற்று காலை நடந்தது. இதில், மண்டல உதவி கமிஷனர் விஜய்பாபு, செயற்பொறியாளர் பாண்டியன், மண்டல நல அலுவலர் லீனா, வருவாய் உதவி அலுவலர் அர்ஜூனன் உள்ளிட்ட பல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், 14 வது வார்டில், எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியான, 2.50 கோடி ரூபாய் செலவில் சமூக நலக்கூடம் கட்டும் பணி உட்பட, 96 தீர்மானங்கள் நிறைவேறின. நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மீதான விவாதம் மற்றும் வார்டின் அடிப்படை பிரச்னைகள் குறித்து, கவுன்சிலர்கள் பங்கேற்று பேசினர்.