திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபு
9715328420
தாராபுரம்;சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை; திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் யூனியன் பேங்க் முன்பு மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் சார்பில் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் தென்னரசு தலைமையில் முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் காளிமுத்து முன்னிலையில் யூனியன் பாங்க் முன்பு மத்திய இடி விசாரணை குறித்து மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
மதிய மோடி பாஜக அரச கண்டித்தும் அமித்ஷாவை கண்டித்தும் இ டி கண்டித்தும் கண்டன கோஷமிட்டனர் இதில் தாராபுரம்,மூலனூர், குண்டடம், மடத்துக்குளம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 70-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் ஆர் கலந்து கொண்டனர்.
அப்போது போராட்டத்தின் போது பேசிய தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் தென்னரசு தெரிவிக்கையில்:-
நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை நடத்தி வரும் விசாரணையில் இருவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தக்க செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதன்மை எதிர்கட்சியாக இருக்கிற இந்திய தேசிய காங்கிரசை முடக்குவதற்கு பல்வேறு அடக்குமுறைகளை ஒன்றிய பா.ஜ.க. அரசு அமலாக்கத்துறை மூலம் ஏவிவிட்டு வருகிறது. விடுதலைப் போராட்ட காலத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து குரல் கொடுக்க பண்டித ஜவஹர்லால் நேரு உள்ளிட்டவர்களால் 1938 இல் நேஷனல் ஹெரால்ட் நாளேடு மிகச் சிறப்பாக வெளிவந்தது. இந்திய விடுதலைக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் ஆதரவு குரலாக ஒலித்தது. நேஷனல் ஹெரால்ட் உருவாக்கிய சொத்துகளை அபகரித்து, காங்கிரஸ் கட்சியின் மீது நிதி நெருக்கடியை உருவாக்க வேண்டுமென்ற நோக்கத்தில் அமலாக்கத்துறை பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. சர்வாதிகார, பழிவாங்கும் ஜனநாயக விரோதச் செயல்களை ஒன்றிய பா.ஜ.க. அரசு தொடர்ந்து நிகழ்த்தி வருகிறது. சோனியா காந்தி அவர்களுக்கும் ராகுல் காந்திக்கும் அவர்களுக்கும் கெட்ட பெயரை உருவாக்கும் நோக்கத்தில் இந்த செயலை மத்திய அரசு செய்து வருவதாக தென்னரசு இவ்வாறு தெரிவித்தார்.
பேட்டி:திரு,தென்னரசு, காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர்.