வேகத்தடை அமைக்க வேண்டும் தொடரும் விபத்து
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட லயன்ஸ்டவுன் இரண்டாவது தெரு பகுதியில் போக்குவரத்து அதிக அளவில் ஏற்பட்டு வருகிறது இந்த நிலையில் பள்ளி மாணவ மாணவிகளை ஏற்றி வந்த ஆட்டோவும் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியது இதில் ஆட்டோ கவிழ்ந்தது ஆட்டோவில் இருந்த பள்ளி மாணவ மாணவிகள் எந்த ஒரு காயமும் இன்றி தப்பித்தனர்
இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது இதனை அடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
இதனை அடுத்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கூறுகையில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது பலமுறை வேகத்தடை அமைக்க வேண்டும் என்று கூறியும் இதுவரை வேகத்தடை அமைக்கவில்லை ஆகையால் உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் இந்தப் பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்